அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்.திருக்கடையூர் மூலவர் அமிர்தகடேசுவரர் பெருமை சுயம்பு சிறப்பு அட்டவீரட்டதலம் அம்பாள் அபிராமியம்மன் விநாயகர் கள்ளவிநாயகர் தலமரம் சாதிமல்லி தீர்த்தம் அமிர்தகுளம் பதிகம் தேவாரம் ஊர் திருக்கடையூர் மாவட்டம் சஷ்டியப் பூர்த்தி உக்ரரத சாந்தி.பீமரதசாந்தி.சதாபிசேகம் ஜன்ம நட்சத்திரம் ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.69 வயது பூர்த்தியாகி 70 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள.80 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்பூர்த்தி மணிவிழா செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.50 ஆம் கல்யாண ஆண்டு விழா ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு கல்யாண வரம் குழந்தைவரம் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும்.எமபயம் அண்டாது.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன் அங்க பிரதட்சணம் கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.வியாதிகள் குணமாக சங்காபிசேகமும் புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்துதலும் அபிசேகம் செய்தலும் சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரின் வாழ்க்கை இத்தலத்தோடு சம்பந்தப்பட்டது.இத்தலத்தில் பஞ்சாங்கம் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.இத்தலத்து அபிராமி அம்மன் மீது மிகவும் பற்றுள்ளவராகவும் அவரது அருளில் தன்னை மறந்தவராக இருந்து வந்தார்.ஒருமுறை அவருக்கு வேண்டாதவர்கள் அவரை மதிகெட்டவர் என்று சரபோஜி மன்னரிடம் கோள் சொன்னார்கள்.ஆனால் அன்று அம்மாவாசை தினம்.கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு மட்டும் நிலவு தெரியவில்லை என்றால் நீ கழுவேற்றப்படுவாய் என்று கூறினாணர்.அபிராமி கோயில் வாசலிலே அக்னி வளர்த்து அதன் மீது நூறு கயிறுகளைக் கட்டிய மரஉரியில் ஏறி அமர்ந்து கொண்டு பாட ஆரம்பித்தார் பட்டர்.அதுதான் அபிராமி அந்தாதி.பட்டர் பாடி முடித்தவுடன் அபிராமி தன் காதில் இருந்த தாடங்கத்தை எடுத்து வானிலே வீசினாள்.அது பூரண சந்திரனாக பிரகாசித்து உலகை ஔத வௌளதில் ஆழ்த்தியது.இந்த அதியத்தையும் அம்மனின் அருளையும் அபிராமி பட்டரின் பக்தியும் மெச்சி மன்னன் அவரை வணங்கினான்.இது இத்தலத்து அம்மனின் அருளாசியை எடுத்துக்காட்டும் நடந்த சம்பவம் ஆகும்.கள்ளப்பிள்ளையார்.அதை ஓரிடத்தில் ஔதத்து வைத்துவிட்டார்கள்.எந்த காரியத்தை செய்தாலும் பிள்ளையாரை வணங்கியபின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.இவர்கள் நம்மை மதிக்காமல் இதையெல்லாம் செய்கிறார்களே என்று பிள்ளையாருக்கு கோபம் வந்து விட்டதாம்.திரும்பி வந்து தேடிய தேவர்களுக்கு விசயம் சிவபெருமான் மூலம் தெரிய வந்தது.பின் பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.கள்ளத்தனம் செய்த பிள்ளையார் ஔதத்து வைத்த அமிர்த கடத்தை எடுத்து தந்தார்.அதனால் அவருக்கு கள்ளவாரணப்பிள்ளையார் என்று பெயர்.விநாயகரிடம் இருந்து அமுத கடத்தைப் பெற்றுக் கொண்ட போனவர்கள் அதை வைத்து விட்டு நீராடப் போனார்கள்.திரும்ப வந்து எடுத்தபோது அது இருந்த இடத்திலிருந்து வரவில்லை.அதுவே சிவலிங்கத் திருமேனியாகி விட்டது.அது தான் அமிர்தகடேசுவரர்.சாதிமல்லி மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம்.பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது.மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.தலபெருமைகள் மூலவர் சுயம்பு லிங்கம்.மேற்கு பார்த்த சந்நிதி.எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது.அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம்.கால சம்கார மூரத்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார்.பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம்.அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.நவகிரகங்கள் இங்கு கிடையாது.நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.ராகு தோசங்கள் இங்கு கிடையாது.அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள்.விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று.பிரம்மன் அகஸ்தியர் புலஸ்தியர்.வாசுகி துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது.63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள்.அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.அப்பர் ஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற சிவதலம்.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 4268 287429.முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மயிலாடுதுறை 22 கி.மீ.சீர்காழி 30 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருக்கடையூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருக்கடையூர் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி சிதம்பரம் நாகபட்டினம் வழியில் திருக்கடையூர் உள்ளது.இத்தலத்துக்கு காரைக்கால் சீர்காழி மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் எம சம்ஹாரம் சித்திரை மாதம் 18 நாட்கள் மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும்.தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வௌதயே வரும்.கார்த்திகை சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.புரட்டாசி நவராத்திரி மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும்.ஆடிப்பூரம் நவராத்திரி பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும் கந்தர் சஷ்டி.மகாசிவராத்திரி பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.தை அம்மாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு மிருகண்டு முனிவர் மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை.மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார்.குறைந்த ஆயுளுடனும் நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார்.இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான்.107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான்.அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது.எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார்.எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான்.எமன் பாசக்கயிறை வீசினார்.அத்தோடு மார்க்கண்டா நீ என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாய் இரு என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டுவிட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது.பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.தேவி ஈசனிடம் முறையிடகோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார்.
No comments:
Post a Comment