.

இதுவரைக்கும் வந்தவா

come and enjoy the function.

Monday, May 2, 2011

அபிராமி.... அபிராமி...


அபிராமி.... அபிராமி...

அமாவாசை தினத்தில் நிலாவை ஒளிரச்செய்த அபிராமி அம்மனின் திருத்தலம் திருக்கடவூர். இந்நிகழ்ச்சி நடந்தது ஒரு தை அமாவாசை தினத்தில் தான்.
சோழவள நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அபிராமி பட்டர் அவதரித்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலிருந்தே இவர் அபிராமியின் மேல் அளவற்ற பக்தி கொண்டு பித்தனைப் போல திரிந்தார். இவருக்கு வேண்டப்படாதவர்கள் இவரைப்பற்றி சரபோஜி மன்னரிடம் தவறாக கூறிவிட்டார்கள். பட்டரை அழைத்த மன்னர் சூஇன்று என்ன திதி?' என கேட்டார். சதா சர்வகாலமும் பவுர்ணமி போன்ற அபிராமி முகத்தின் நினைப்பிலேயே இருந்ததால், 'இன்று பவுர்ணமி திதி,' என கூறிவிட்டார். ஆனால், அன்று அமாவாசை திதி.
மன்னருக்கு கோபம் வந்து விட்டது. 'இன்று இரவு நிலா வராவிட்டால், நீ கழுவேற்றப்படுவாய்,' என கூறிச் சென்று விட்டார். கோயில் வாசலில் நெருப்பு வளர்க்கப்பட்டு, அதன் மேல் உறி கட்டி அபிராமி பட்டரை நிறுத்தி விட்டார்கள். அப்போது அம்மனை வேண்டி அபிராமி பட்டரால் பாடப்பட்டது தான் சூஅபிராமி அந்தாதி'. இவர் பாடி முடித்ததும் அம்மன் வானில் தோன்றி, தன் காதிலிருந்த தாடங்கத்தை வானில் வீசி எறிந்தாள். தடாங்கம் நிலவாய் மாறி ஒளிர்ந்தது. மன்னனும் அபிராமி பட்டரை விழுந்து வணங்கினான்.
இத்தலம் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.
தல வரலாறு: மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தினை மெச்சிய சிவன், "உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள் வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?" எனக்கேட்டார்.
மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும் என்றார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்கள் சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர் வருகிறார். இவரது கடைசி நாளும் வந்து விடுகிறது. உயிரைப்பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை. மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், "என்னையும் சேர்த்தா பாசக்கயிறால் இழுக்கிறாய், இத்துடன் ஒழிந்து போ" என எமனை அழித்து விடுகிறார். இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போனது, பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தருகிறார். எமன் பாசக்கயிறு வீசியதால் ஏற்பட்ட தழும்பு இன்னமும் சிவனின் திருமேனியில் காணலாம்.
தலச்சிறப்பு: மூலவர்: அமிர்தகடேசுவரர், சுயம்பு மூர்த்தி. அம்மன்: அபிராமி. தலவிருட்சம்: ஜாதிமல்லி. தீர்த்தம்: அமிர்தகுளம். ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது. மற்றவர்கள் இதை வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ எடுத்து அர்சித்ததற்கு சமம்.
பெயர்க்காரணம்: ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, அசுரர்களுக்கு தெரியாமல் தேவர்கள் சிறிது அமுதத்தை ஒரு கலயத்தில் எடுத்து மறைத்து விட்டார்கள். எந்த காரியம் செய்தாலும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும் என்பது நியதி. ஆனால் தேவர்கள் அப்படி செய்யவில்லை. கோபம் கொண்ட பிள்ளையார் அமுத கலசத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். சிவன் மூலம் இந்த விஷயம் தேவர்களுக்கு தெரிய வந்தது. பிள்ளையாரிடம் சென்று மன்னிப்பு கேட்டார்கள் தேவர்கள். பிள்ளையாரும் மன்னித்து அமுத கலசத்தை கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்ட தேவர்கள் அந்த கலசத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நீராடச் சென்றார்கள். திரும்பி வந்து எடுத்தபோது அந்த கலசம் வரவில்லை. அது சிவலிங்க திருமேனி ஆகி அமிர்தகடேசுவரர் என்ற பெயர் பெற்று விட்டது.
சஷ்டியப்த பூர்த்தி தலம்: 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும், 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும், 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி பூஜையும், 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம்.
இத்தல நாயகி அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். அமிர்தகடேசுவரரை வழிபட்டால் துயரங்கள் போக்கி இன்பம் தருகிறார்.
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியனவும் தந்தருள்கிறார். இருதய நோய் உள்ளவர்களும், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்திற்கு வந்து சப்த திரவிய மிருத்ஞ்ய ஹோமம் செய்து வழிபட்டு பலனடைகிறார்கள்.
திருவிழா: எம சம்ஹாரம் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 6ம் நாள் கால சம்ஹார மூர்த்தி வெளியே வருகிறார். கார்த்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேக வழிபாடு, நவராத்திரி, மார்கழி விவிதபாதம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. தவிர தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேஷம்.
எப்படி செல்வது?: மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் அமைந்துள்ளது திருக்கடையூர். இத்தலத்துக்கு காரைக்கால், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி பஸ்கள் உள்ளது.

No comments:

Post a Comment