பூம்புகாரில் கோவலன் வாழ்ந்தான் என வரலாறு சொல்கிறது. மாதவியின் வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது. கருவி எனும் ஊரின் வழியாய் வந்தால் பத்து கிலோமீட்டர்தான். மாட்டு வண்டி பூட்டி வந்திருக்கலாம். 1983 ல் நான் என் நண்பரோடு வந்தபோது ஆக்கூர் உறவினர் வீட்டிலிருந்து மாட்டுவண்டி கட்டித்தான் வந்தேன் எனும்போது நானூறு வருடம் முன் மாட்டுவண்டி என்பது பொய்யாய் இருக்க முடியாது. சிலப்பதிகாரம் என்பது உண்மைதான் என்பதற்கு சாட்சியாய் இப்போதும் கோபாலன் எனும் பெயர் நகரத்தாரிடையே இருப்பதும், அவர்கள் சாந்தி செய்து கொள்ளும் பழக்கமும்,( மற்ற சாதியினர் சாந்தி செய்து கொள்ளும் பழக்கம் பின்னாளில்தான் வந்தது), மாதவியின் வீடு இப்போதும் தேரோடும் வீதியிலே இருப்பதும் சான்றுகளாய் உள்ளன.
ஆகமங்களிலும் புராண தர்ம சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு உரியனவான 41சடங்குகள் சொல்லப் பட்டிருக்கிறது. . "ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்" இப்படி விதிக்கப்பட்டுள்ள சாந்திகளை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.
Showing posts with label மாதவிவீடு. Show all posts
Showing posts with label மாதவிவீடு. Show all posts
Wednesday, May 4, 2011
தேரோடும் வீதியிலே மாதவியின் வீடு
பூம்புகாரில் கோவலன் வாழ்ந்தான் என வரலாறு சொல்கிறது. மாதவியின் வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது. கருவி எனும் ஊரின் வழியாய் வந்தால் பத்து கிலோமீட்டர்தான். மாட்டு வண்டி பூட்டி வந்திருக்கலாம். 1983 ல் நான் என் நண்பரோடு வந்தபோது ஆக்கூர் உறவினர் வீட்டிலிருந்து மாட்டுவண்டி கட்டித்தான் வந்தேன் எனும்போது நானூறு வருடம் முன் மாட்டுவண்டி என்பது பொய்யாய் இருக்க முடியாது. சிலப்பதிகாரம் என்பது உண்மைதான் என்பதற்கு சாட்சியாய் இப்போதும் கோபாலன் எனும் பெயர் நகரத்தாரிடையே இருப்பதும், அவர்கள் சாந்தி செய்து கொள்ளும் பழக்கமும்,( மற்ற சாதியினர் சாந்தி செய்து கொள்ளும் பழக்கம் பின்னாளில்தான் வந்தது), மாதவியின் வீடு இப்போதும் தேரோடும் வீதியிலே இருப்பதும் சான்றுகளாய் உள்ளன.
சிறப்புக்கள்
சிறப்புக்கள்
- அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.
- திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார்.
- காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
- அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.
- உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.
- அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.
- இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.
- மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)
- சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம் ' எனவும் வழங்கப்படுகின்றன.
- மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.
- பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.
- ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.)
- ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
- இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.
- பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
- கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.
- கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.
- இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
- ( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)
Subscribe to:
Posts (Atom)