.

இதுவரைக்கும் வந்தவா

come and enjoy the function.

Monday, May 2, 2011

திருக்கடையூர் தலச்சிறப்பு


திருக்கடையூர் தலச்சிறப்பு

  • சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடையூர். இவ்வாலயம் தருமபுரம் ஆதீன அருளாட்சிக்கு உட்பட்ட்து.
  • திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற இத்தலம் மேற்கு நோக்கி அமைந்தது.
  • பிஞ்சிலம் வில்வ விருட்சத்தை தல விருட்சமாகக் கொண்டது.
  • தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் முன்பு வினாயகரை வழிபடாத காரணத்தினால், அவரால் (திருடி) இந்த தலத்தில் மறைத்து வைத்த அந்த அமிர்தகுடமே! சிவலிங்கமான காரணத்தினால் மூலவருக்கு அமிர்த+கடம் "அமிர்தகடேஸ்வரர்" என திருநாமம்.
"தனம்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறிய
மனந்தரும் தெய்வ வடிவுந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே."

அஷ்ட வீரட்டன நடந்த ஊரும் சிறப்பும்

1திருக்கண்டியூர்பிர்மன் சிரசு கிள்ளியது
2திருக்கோவிலூர்அந்தகாசுரவதம்
3திருவதிகைதிரிபுரம் எரித்தது
4திருப்பறியலூர்தட்ச சம்ஹாரம்
5விற்குடிசலந்திரா சூரன் சன்ஹாரம்
6திருக்கொற்கைமன்மத தகனம்
7வழுவூர்யானை தோல் கிழித்தது
8திருக்கடவூர்எமனையே சம்ஹரித்தது

No comments:

Post a Comment