.

இதுவரைக்கும் வந்தவா

come and enjoy the function.

Wednesday, May 11, 2011

Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyur Mahalakshmi homam

Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyurGanapathy homam Navagraha homam Mrithyunjaya homam Ayul homam Thanvadhiri homam Mahavishnu homam Mahalakshmi homam Sudharshana homam Sri Amirthagadesa gurukkal is doing the pooja.

Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyur

Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyur

Mahamrityunjaya Mantra



Mahamrityunjaya Mantra

<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/UpDzGSygu1s" frameborder="0" allowfullscreen></iframe>

Mahamrityunjaya Mantra



The Mahamrityunjaya Mantra (Sanskrit: महामृत्युंजय मंत्रMahāmṛtyuṃjaya Mantra "great death-conquering mantra"), also called theTryambakam Mantra, is a verse of the Rigveda (RV 7.59.12).It is addressed to Tryambaka "the three-eyed one", an epithet of Rudra, later identified with Shiva.[1][2] The verse also recurs in the Yajurveda (TS 1.8.6.i; VS 3.60)[3]
Along with the Gayatri mantra it is one of the most widely known mantras of contemporary Hinduism.
The mantra reads
त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान् म्रुत्योर्मुक्षिय मामृतात् ॥
(IAST transliteration):
tryambakaṃ yajāmahe sugandhiṃ puṣṭi-vardhanam
urvārukam iva bandhanān mṛtyor mukṣīya māmṛtāt
This great mantra dedicated to Rudra as Mrityunjaya is found in the Rig Veda. It is called the Maha Mrityunjaya mantra, the Great Death-Conquering mantra. It is a mantra that has many names and forms. It is called the Rudra mantra, referring to the furious aspect of Shiva; the Tryambakam mantra, alluding to Shiva's three eyes; and it is sometimes known as the Mrita-Sanjivini mantra because it is a component of the "life-restoring" practice given to the primordial sage Shukra after he had completed an exhausting period of austerity. The Maha Mrityunjaya mantra is hailed by the sages as the heart of the Veda. Along with the Gayatri mantra it holds the highest place among the many mantras used for contemplation and meditation

Tuesday, May 10, 2011

sacred thaali (mangalsutra) and sacred thread (poonool)


The sacred thread ceremony (Sanskrit: उपनयनम्, upanayanam) that invests the wearer with the sacred thread is often considered a socially and spiritually significant rite (or samskara). It has varying formats across Hindu-Buddhist communities and is also called by varying names, including UpanayanaMunj,Janeu rasm and Bratabandha.Among Hindus, the ceremony was once associated with the three higher castes, but is now administered to all adolescent males without consideration of caste by several denominations.[7] Though far less common, it is also sometimes conducted for girls.[7] In some regions of modern North India, the ceremony is often conducted as an immediate precursor to wedding ceremonies, instead of during adolescence, while in other regions it is almost always associated with adolescence.[8]Among Buddhists, the ceremony can be conducted at all ages and for both genders.

The word mangalsutra literally means "an auspicious thread". It is usually a gold pendant strung from a yellow thread prepared with turmeric, a string of black beads or simply a gold chain. It is comparable to the wedding ring of the West. A married woman is expected to wear the mangalsutra until her husband's death. It is tied around the neck of the bride on the day of marriage symbolizing the union. Mangalya dharanam or Thaali kettu (literally "wearing the mangalya or thaali") is the most important part of a Hindu marriage ceremony. In certain local cultures, the groom ties the first of the three knots while his sisters tie the rest.
It is called मंगळसूत्र (mangalsutra) in Marathi, தாலி (thaali) in Tamil, ತಾಳಿ (thaali) or ಮಾಂಗಲ್ಯ (mangalyasutra) in Kannada and thaali (తాళి), maangalyam (మాంగళ్యము), mangalsutram (మంగళసూత్రము) or pustelu (పుస్తెలు) in Telugu. Konkanis wear three necklaces around their neck referred to as Dhaaremani or Muhurtmani (big golden bead), Mangalasutra with one or two gold discs and Kasithaali with gold and coral beads. In Malayalam it is simply referred to as Thaali in general 


Wednesday, May 4, 2011

route map


bathing in the river ganges at gangotri


a beautiful place to see. thunder storm and rain made the place more beautiful. Here , the Ice cold River Ganga passing by the side of the temple named after it...coming as it is from a source called Gaumukh that is a 26 km long glacier and himalayan mountain ranges 15 kms upwards from this point a small village/town called Gangotri... the temple remains open from May to sept/ Oct or diwali, when it snows heavily and gets impossible for vehicles to come up the steep snow covered roads. During these 5 months that its open season, thousands of Hindu pilgrims, walk,hitch hike, trek or drive up to this point to bathe in these freezing waters at daybreak. From here onwards before it reaches the plains below,it gushes through deep gorges, mountain passes and valleys- a good 150 kms of the most scenic and wildest of journeys. Dozens of small rivers and 100's of streams lend their water and merge into it. By the time it reaches Rishikesh & Haridwar its a huge river whose beauty can only be felt and seen with the eyes and no photograph can transfer the feel and ambient mood that surrounds it The other mighty river that has origins in the same area, separated by less than a 100 km , is the Yamuna that is considered Ganga's sister. The Yamuna has a totally diferent trajectory inthe Himalayas until in the plains they get closer and finally merge. some of these images will show the area around the Yamuna's flow path!

Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyur


Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyur Age 59 compete 60 Starting - Ukrathasanthi Age 60 compete 61 starting - Shastiapthapurthi Age 70 compete 75 starting - Beemarathasanthi Age 80 compete 85 starting - Sathaabisegam

map


தேரோடும் வீதியிலே மாதவியின் வீடு


பூம்புகாரில் கோவலன் வாழ்ந்தான் என வரலாறு சொல்கிறது.   மாதவியின் வீடு திருக்கடையூரில்  தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.  கருவி எனும் ஊரின் வழியாய் வந்தால் பத்து கிலோமீட்டர்தான்.  மாட்டு வண்டி பூட்டி வந்திருக்கலாம்.   1983 ல் நான் என் நண்பரோடு வந்தபோது ஆக்கூர் உறவினர் வீட்டிலிருந்து மாட்டுவண்டி கட்டித்தான் வந்தேன் எனும்போது நானூறு வருடம் முன் மாட்டுவண்டி என்பது பொய்யாய் இருக்க முடியாது.   சிலப்பதிகாரம் என்பது உண்மைதான் என்பதற்கு சாட்சியாய் இப்போதும் கோபாலன் எனும் பெயர் நகரத்தாரிடையே இருப்பதும், அவர்கள் சாந்தி செய்து கொள்ளும் பழக்கமும்,( மற்ற சாதியினர் சாந்தி செய்து கொள்ளும் பழக்கம் பின்னாளில்தான் வந்தது), மாதவியின் வீடு இப்போதும் தேரோடும் வீதியிலே இருப்பதும் சான்றுகளாய் உள்ளன.

சிறப்புக்கள்


சிறப்புக்கள்

  • அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.
  • திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
  • இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார்.
  • காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
  • அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.
  • உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.
  • அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.
  • இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.
  • மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)
  • சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம் ' எனவும் வழங்கப்படுகின்றன.
  • மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.
  • பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.
  • ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.)
  • ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
  • இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.
  • பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
  • கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.
  • கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.
  • இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • ( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்.திருக்கடையூர்

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்.திருக்கடையூர் மூலவர் அமிர்தகடேசுவரர் பெருமை சுயம்பு சிறப்பு அட்டவீரட்டதலம் அம்பாள் அபிராமியம்மன் விநாயகர் கள்ளவிநாயகர் தலமரம் சாதிமல்லி தீர்த்தம் அமிர்தகுளம் பதிகம் தேவாரம் ஊர் திருக்கடையூர் மாவட்டம் சஷ்டியப் பூர்த்தி உக்ரரத சாந்தி.பீமரதசாந்தி.சதாபிசேகம் ஜன்ம நட்சத்திரம் ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள்.60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.69 வயது பூர்த்தியாகி 70 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள.80 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்பூர்த்தி மணிவிழா செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.50 ஆம் கல்யாண ஆண்டு விழா ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு கல்யாண வரம் குழந்தைவரம் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும்.எமபயம் அண்டாது.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு.நேர்த்தி கடன் அங்க பிரதட்சணம் கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.வியாதிகள் குணமாக சங்காபிசேகமும் புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்துதலும் அபிசேகம் செய்தலும் சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரின் வாழ்க்கை இத்தலத்தோடு சம்பந்தப்பட்டது.இத்தலத்தில் பஞ்சாங்கம் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.இத்தலத்து அபிராமி அம்மன் மீது மிகவும் பற்றுள்ளவராகவும் அவரது அருளில் தன்னை மறந்தவராக இருந்து வந்தார்.ஒருமுறை அவருக்கு வேண்டாதவர்கள் அவரை மதிகெட்டவர் என்று சரபோஜி மன்னரிடம் கோள் சொன்னார்கள்.ஆனால் அன்று அம்மாவாசை தினம்.கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு மட்டும் நிலவு தெரியவில்லை என்றால் நீ கழுவேற்றப்படுவாய் என்று கூறினாணர்.அபிராமி கோயில் வாசலிலே அக்னி வளர்த்து அதன் மீது நூறு கயிறுகளைக் கட்டிய மரஉரியில் ஏறி அமர்ந்து கொண்டு பாட ஆரம்பித்தார் பட்டர்.அதுதான் அபிராமி அந்தாதி.பட்டர் பாடி முடித்தவுடன் அபிராமி தன் காதில் இருந்த தாடங்கத்தை எடுத்து வானிலே வீசினாள்.அது பூரண சந்திரனாக பிரகாசித்து உலகை ஔத வௌ஢ளதில் ஆழ்த்தியது.இந்த அதியத்தையும் அம்மனின் அருளையும் அபிராமி பட்டரின் பக்தியும் மெச்சி மன்னன் அவரை வணங்கினான்.இது இத்தலத்து அம்மனின் அருளாசியை எடுத்துக்காட்டும் நடந்த சம்பவம் ஆகும்.கள்ளப்பிள்ளையார்.அதை ஓரிடத்தில் ஔதத்து வைத்துவிட்டார்கள்.எந்த காரியத்தை செய்தாலும் பிள்ளையாரை வணங்கியபின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.இவர்கள் நம்மை மதிக்காமல் இதையெல்லாம் செய்கிறார்களே என்று பிள்ளையாருக்கு கோபம் வந்து விட்டதாம்.திரும்பி வந்து தேடிய தேவர்களுக்கு விசயம் சிவபெருமான் மூலம் தெரிய வந்தது.பின் பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.கள்ளத்தனம் செய்த பிள்ளையார் ஔதத்து வைத்த அமிர்த கடத்தை எடுத்து தந்தார்.அதனால் அவருக்கு கள்ளவாரணப்பிள்ளையார் என்று பெயர்.விநாயகரிடம் இருந்து அமுத கடத்தைப் பெற்றுக் கொண்ட போனவர்கள் அதை வைத்து விட்டு நீராடப் போனார்கள்.திரும்ப வந்து எடுத்தபோது அது இருந்த இடத்திலிருந்து வரவில்லை.அதுவே சிவலிங்கத் திருமேனியாகி விட்டது.அது தான் அமிர்தகடேசுவரர்.சாதிமல்லி மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம்.பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது.மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.தலபெருமைகள் மூலவர் சுயம்பு லிங்கம்.மேற்கு பார்த்த சந்நிதி.எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது.அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம்.கால சம்கார மூரத்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார்.பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம்.அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.நவகிரகங்கள் இங்கு கிடையாது.நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.ராகு தோசங்கள் இங்கு கிடையாது.அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள்.விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று.பிரம்மன் அகஸ்தியர் புலஸ்தியர்.வாசுகி துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது.63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள்.அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.அப்பர் ஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற சிவதலம்.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 4268 287429.முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மயிலாடுதுறை 22 கி.மீ.சீர்காழி 30 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருக்கடையூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருக்கடையூர் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்டத் தலைநகரான நாகபட்டினத்தில் தங்கும் வசதி விபரம் ஹோட்டல் தமிழ்நாடு போன் 04365 22389கட்டணம் ரூ.200 முதல் 400 வரை போக்குவரத்து வசதி சிதம்பரம் நாகபட்டினம் வழியில் திருக்கடையூர் உள்ளது.இத்தலத்துக்கு காரைக்கால் சீர்காழி மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் எம சம்ஹாரம் சித்திரை மாதம் 18 நாட்கள் மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும்.தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வௌதயே வரும்.கார்த்திகை சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.புரட்டாசி நவராத்திரி மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும்.ஆடிப்பூரம் நவராத்திரி பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும் கந்தர் சஷ்டி.மகாசிவராத்திரி பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.தை அம்மாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு மிருகண்டு முனிவர் மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை.மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார்.குறைந்த ஆயுளுடனும் நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார்.இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான்.107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான்.அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது.எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார்.எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான்.எமன் பாசக்கயிறை வீசினார்.அத்தோடு மார்க்கண்டா நீ என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாய் இரு என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டுவிட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது.பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.தேவி ஈசனிடம் முறையிடகோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார்.

The bliss of sixty is the bless of plenty!

     The bliss of sixty is the bless of plenty!  பல்லாண்டு வாழ்க.  சஷ்டியப்த பூர்த்தி தலம்:-  திருக்கடையூர்     - 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும்     - 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும்     - 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி பூஜையும்     - 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு     மிகவும் புகழ்பெற்ற தலம்.  சோழவள நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அபிராமி பட்டர் அவதரித்தார். இவரது  இயற்பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலிருந்தே இவர் அபிராமியின் மேல் அளவற்ற பக்தி  கொண்டு பித்தனைப் போல திரிந்தார். இவருக்கு வேண்டப்படாதவர்கள் இவரைப்பற்றி  சரபோஜி மன்னரிடம் தவறாக கூறிவிட்டார்கள்.  பட்டரை அழைத்த மன்னர் 'இன்று என்ன திதி?' என கேட்டார்.  சதா சர்வகாலமும் பவுர்ணமி போன்ற அபிராமி முகத்தின் நினைப்பிலேயே இருந்ததால்,  'இன்று பவுர்ணமி திதி,' என கூறிவிட்டார். ஆனால், அன்று அமாவாசை திதி.  மன்னருக்கு கோபம் வந்து விட்டது. 'இன்று இரவு நிலா வராவிட்டால், நீ  கழுவேற்றப்படுவாய்,' என கூறிச் சென்று விட்டார். கோயில் வாசலில் நெருப்பு  வளர்க்கப்பட்டு, அதன் மேல் உறி கட்டி அபிராமி பட்டரை நிறுத்தி விட்டார்கள்.  அப்போது அம்மனை வேண்டி அபிராமி பட்டரால் பாடப்பட்டது தான் "அபிராமி அந்தாதி".  இவர் பாடி முடித்ததும் அம்மன் வானில் தோன்றி, தன் காதிலிருந்த தாடங்கத்தை  வானில் வீசி எறிந்தாள். தடாங்கம் நிலவாய் மாறி ஒளிர்ந்தது. மன்னனும் அபிராமி  பட்டரை விழுந்து வணங்கினான். இத்தலம் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அப்பர்,  சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.*  தல வரலாறு:*- மிருகண்டு முனிவர் - மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக  குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. முனிவர் சிவனை நோக்கி கடும் தவம்  புரிந்தார். தவத்தினை மெச்சிய சிவன், "உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால்  16ஆண்டுகளே உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள் வாழும், இதில்  எந்தக்  குழந்தை வேண்டும்?" எனக்கேட்டார்.  மிருகண்டு திகைத்தார்.  அறிவுள்ள குழந்தையே வேண்டும் என்றார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என  பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்கள்  சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர்  வருகிறார். இவரது கடைசி நாளும் வந்து விடுகிறது. உயிரைப்பறிப்பதற்காக எமன்  கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை  கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை. மார்க்கண்டேயரது  உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது  விழுகிறது. கோபம் கொண்ட சிவன், "என்னையும் சேர்த்தா பாசக்கயிறால் இழுக்கிறாய்,  இத்துடன் ஒழிந்து போ" என எமனை அழித்து விடுகிறார். இதனால் பூமியில் இறப்பே  இல்லாமல் போனது, பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி  எமனுக்கு உயிர் தருகிறார். எமன் பாசக்கயிறு வீசியதால் ஏற்பட்ட தழும்பு இன்னமும்  சிவனின் திருமேனியில் காணலாம்.*  தலச்சிறப்பு:*-     - மூலவர்: அமிர்தகடேசுவரர், சுயம்பு மூர்த்தி     - அம்மன்: அபிராமி     - தலவிருட்சம்: ஜாதிமல்லி     - தீர்த்தம்: அமிர்தகுளம்  ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது. மற்றவர்கள் இதை  வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ எடுத்து  அர்சித்ததற்கு சமம்.*  பெயர்க்காரணம்:*- ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது,  அசுரர்களுக்கு தெரியாமல் தேவர்கள் சிறிது அமுதத்தை ஒரு கலயத்தில் எடுத்து  மறைத்து விட்டார்கள். எந்த காரியம் செய்தாலும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்  என்பது நியதி. ஆனால் தேவர்கள் அப்படி செய்யவில்லை. கோபம் கொண்ட பிள்ளையார் அமுத  கலசத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். சிவன் மூலம் இந்த விஷயம்  தேவர்களுக்கு தெரிய வந்தது. பிள்ளையாரிடம் சென்று மன்னிப்பு கேட்டார்கள்  தேவர்கள். பிள்ளையாரும் மன்னித்து அமுத கலசத்தை கொடுத்து விட்டார்.  பெற்றுக்கொண்ட தேவர்கள் அந்த கலசத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நீராடச்  சென்றார்கள். திரும்பி வந்து எடுத்தபோது அந்த கலசம் வரவில்லை. அது சிவலிங்க  திருமேனி ஆகி அமிர்தகடேசுவரர் என்ற பெயர் பெற்று விட்டது.   இத்தல நாயகி அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து  வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி  கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். அமிர்தகடேசுவரரை வழிபட்டால்  துயரங்கள் போக்கி இன்பம் தருகிறார்.  வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியனவும் தந்தருள்கிறார்.  இருதய நோய் உள்ளவர்களும், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்திற்கு வந்து  சப்த திரவிய மிருத்ஞ்ய ஹோமம் செய்து வழிபட்டு பலனடைகிறார்கள்.*  திருவிழா:*- எம சம்ஹாரம் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று 18 நாட்கள்  கொண்டாடப்படுகிறது. 6ம் நாள் கால சம்ஹார மூர்த்தி வெளியே வருகிறார். கார்த்திகை  சோமவாரத்தில் 1008 சங்காபிஷேக வழிபாடு, நவராத்திரி, மார்கழி விவிதபாதம்,  ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. தவிர  தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு  விசேஷம்.*  எப்படி செல்வது?:* மயிலாடுதுறை - நாகப்பட்டினம் வழியில் அமைந்துள்ளது  திருக்கடையூர். இத்தலத்துக்கு காரைக்கால், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர்,  கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி பஸ்கள் உள்ளது.

பீமரதசாந்தி


பீமரதசாந்தி

அதாத: ஸம் ப்ரவக்ஷ்யாமி சாந்திம் பீம ரதா பிதாம்
ஹாயனே ஸப்ததிதமே ம்ருத்யுர் பீம ரதோபவேத்
ஷன் மாஸான் ம்ருத்யு மாப்ணோதி தணஹாநிஸ்ததைவச
புத்ர தாராதி நாசஸ்ச த்ரவ்ய தான்ய பசுக்ஷய ஹ
தத்தோஷ சமநார்த்தாய சாந்திம் குர்யாத் விதானாதஹ
ஜன்ம மாஸே ஜன்மதினே ஜன்மர்§க்ஷவா பலான்விதே
-ஸ்ரீ சௌனக மஹரிஷி

விரிவுரை
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் 70-ம் ஆண்டில் பீமரதம் (மிக பயங்கரமான ரதம்) என்னும் வாஹனத்தில் ஏறி ம்ருத்யு (யமன்) நம்மைத் தீர்க்க (அழிக்க) வருகிறான். அது முடியாவிடில் நமது குழந்தைகளுக்கு மரணம், வ்யாதி, விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் குழப்பம், சண்டை முதலியவைகளை ஏற்படுத்துகிறான். அதுவும் முடியாவிடில் திருட்டு, தன நாசம், பிராணிகள் நாசம் முதலிய இழப்புகளை ஏற்படுத்துகிறான். இத்தனை இழப்புகளையும் நீக்க வேண்டுமானால் நமது ஜன்ம தினத்தன்று ம்ருத்யுஞ்ஜயனான ஸ்ரீ பரமேச்வரனை "ஸ்துஹி ஸ்ருதம்" என்னும் மந்திரம் கொண்டு வழிபடவேண்டும். மேலும் ப்ரும்மா, விஷ்ணு, துர்க்கை, அஷ்ட திக் பாலகர்கள் முதலிய தெய்வங்களை "பீமரத சாந்தி" என்னும் இம்முறையில் வழிபடுபவர்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுள், வியாதியற்ற வாழ்க்கை, குடும்பத்தில் ஒற்றுமை ஐஸ்வர்ய சம்ருத்தி முதலிய §க்ஷமங்களோடு வாழ்ந்திருப்பார்கள்.

விளக்கவுரை
ஸ்ரீ பரமேச்வரனுடைய அனுக்¢ரஹத்தினால் நமது எல்லா பாவங்களும் விலகி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மனஸ் ஸாந்தி முதலிய எல்லா நன்மைகளும் நமக்குக் கிடைக்க ஸ்ரீ ருத்ர ஏகாதசினி என்னும் இந்த ஜப ஹோம வைபவம் உதவுகிறது. 59-ம் வயது முடிவில் "உக்ரரத சாந்தி", 60 வயது முடிவில் "ஷஷ்டியப்த பூர்த்தி", 70 வயது முடிவில் "பீமரத சாந்தி", 80 வயது முடிவில் "சதாபிஷேகம்", 90 வயதில் "விஜயரத சாந்தி", 100 வயதில் "கனகாபிஷேகம்"- பிள்ளைவழிப் பேரனுக்குக் குழந்தை பிறந்த பிறகு "ப்ரபௌத்ர சாந்தி" முதலிய வைபவங்களைச் செய்து மேற்படி காலங்களில் ஏற்படும் வ்யாதி, ம்ருத்யுபயம் முதலியவற்றை நீக்கி ஸகல §க்ஷமங்களையும் அடையும்படி சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

நித்திய பூஜைகள்


நித்திய பூஜைகள்

கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது.

சுரபோஜி அரசன் காலத்தில்

  • தனது பக்தர் ஒருவருக்காக 'தை அமாவாசை' அன்று முழு பெளர்ணமியாக்கி "அபிராமி அந்தாதி" அருளச் செய்த சிறப்புடையது.
  • 63 நாயன்மார்களில் குங்குலிய நாயனார், காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி அருள்பெற்ற தலம்.
  • கார்த்திகை மாதத்தில் வரும்(திங்கட்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது.
  • சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழாவும், சித்ராபௌர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் நடைபெறும்.

ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி சிறப்பு அபிஷேகங்கள்

1சித்திரை விஷுஉச்சிகால அபிஷேகம்
2ஐந்தாம் திருவிழாபடி இறங்குதல்உச்சிகால அபிஷேகம்
3மூன்றாம் திருநாள் காலசம்ஹார வீரநடன காட்சியும் 100 கால் மண்டபத்தில் விஷேச காட்சியும்உச்சிகால அபிஷேகம்
4உத்சவ பிராயச்சித்தம்உச்சிகால அபிஷேகம்
5ஆனி திருமஞ்சனம் (உத்திரம்)உச்சிகால அபிஷேகம்
6தஷிணாயன புண்யகால (அயனம்) ஆடி மாதம்உச்சிகால அபிஷேகம்
7கன்யா சதுர்த்தி (திதி) விஷேச 2 காலம் இரவுஉச்சிகால அபிஷேகம்
8துலாவிஷு ஐப்பசிஉச்சிகாலம்
9ஆருத்ராகாலசந்தி
10தனூர் வியதீ பாதம்காலசந்தி
11உத்திராயண புண்யஉச்சிகாலம்
12கும்ப சதுர்தசி இரவு2 காலம்

அறுபதிலும் எண்பதிலும் என்ன விசேஷங்க? ஹரி ராஜசேகரவாத்தியார


அறுபதிலும் எண்பதிலும் என்ன விசேஷங்க?
ஹரி ராஜசேகரவாத்தியார்
மங்களா சரணமாக ஓரிரு ச்லோகத்துடன் தொடங்கலாமே.
அசிந்தயா வ்யக்தரூபாய நிர்குணாய குணாத்மனே |
ஸமஸ்த ஜகதாரமூர்தயே ப்ரம்ஹணே நம: ||
கர்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸாரஸாரம் புஜகேந்த்ர ஹாரம் |
ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம் பவானீஸஹிதம் நமாமி ||
யத்ரைவ யத்ரைவ மனோ மதீயம் தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம் |
யத்ரைவ யத்ரைவ ஸிரோ மதீயயம் தத்ரைவ தத்ரைவ பதத்யம்தே ||

ஸாக்ஷாத் ஸர்வேச்வரனான பரப்ரம்ஹத்தின் லீலையினால் தோன்றிய ஜகத் ஸ்ருஷ்டியில் எண்ணற்ற ஜீவராசிகள் இப்பூமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றன. இவற்றுள் கிடைத்தற்கரிய விவேகமுள்ள மனிதப் பிறவியில்தான் வேத, சாஸ்த்ரங்களில் சரியாக விதிக்கப்பட்ட தர்மங்களையும் கர்மாக்களையும் அனுஷ்டிக்க முடியும். விவேகம் என்னும் பகுத்தறிவின் மூலம் மனிதன் தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்து கொள்ள வேண்டும். ச்ருதி, ஸ்ம்ருதிகள் கூறும் ஸ¨க்ஷ்மமான (நுட்பமான) தர்மங்களையும் தத்வங்களையும் கதைகள் மூலம் எளிதாக்கித் தருகின்றன இதிகாச, புராண காவியங்கள்.
உபநயனம் ஆகிய ப்ரம்ஹசாரிக்கு சில நியமங்கள், தர்மங்கள்; விவாஹம் ஆகிய க்ருஹஸ்தனுக்கு பற்பல தர்மங்கள், கர்மாக்கள்; மேலும் அநேக புண்ய காலங்களில் செய்ய வேண்டிய தர்மங்கள்; ஆகியன காலத்தைக் குறிப்பிட்டே தர்மங்கள் விதிக்கப் பட்டிருப்பதால் இத்தகைய தர்மங்களை அனுஷ்டிக்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டும். மனிதனுக்கு ஆயுள் (வயது) 100 ஆண்டுகள் என வேதம் வாழ்த்துகிறது.

“சதாயுர்வை புருஷ: |
சத ஸம்வத்ஸரம் தீர்கமாயு: |”

ஜோதிஷ சாஸ்த்ரமோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருஷங்கள் எனக் கணக்கிட்டுள்ளது. நவக்ரஹ நாயகர்கள் பின்வரும் காலக்ரமப்படி மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கின்றனர். கேது=7, சுக்கிரன்=20, சூரியன்=6, சந்திரன்=10, செவ்வாய்=7, ராகு=18, குரு=16, சனி=19, புதன்=17 ஆக மொத்தம் 120 வருஷங்கள்.

சாந்திகள் ஏன்?

ஒரு குழந்தைக்கு பிறந்தது முதல் 4வருஷம் மாதாவின் பாபத்தாலும் அடுத்த 4வருஷம் பிதாவின் பாபத்தாலும் பின் 4வருஷம் தன் பாபத்தாலும் அரிஷ்டம் ஏற்படுகிறது. பிறந்தது முதல் 8 வயது வரை பாலாரிஷ்டம். பிறகு 20 வயது வரை யோகாரிஷ்டம். இவ்வாறு பல அரிஷ்டங்கள் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றால் ஆயுர்பாவத்துக்கு குறைவு ஏற்படுகிறது. மேலும் நாம் முற்பிறவியில் செய்த புண்யம் (நன்மை) பாபம் (தீமை) ஆகியவற்றுக்கேற்ப இப்பிறவியில் அவ்வினைப் பயன்களான சுக துக்கங்களை அனுபவிக்க நேரிடுகிறது. சுகத்தை அனுபவிப்பதால் புண்யகர்மாவும், துக்கத்தை அனுபவிப்பதால் பாவகர்மாவும் நசிகின்றன. இப்பிறவியில் செய்யும் பாபங்களின் (தீய எண்ணம், சொல், செயல்) பயனாக நமக்குப் பல துன்பங்கள் வருகின்றன.

பொதுவாக நம் ஆயுளின் பின்பகுதியில் (அதாவது 50 வயதுக்குப்பின்) முதுமை தொடங்கி உடல் நலம் குன்றிப் பல நோய்கள் தாக்கி ஆயுட்காலம் குறைகிறது. இக்குறைகள் நீங்கி நலமாக வாழ வைத்யமுறைகள் தவிர வைதிக கர்மாக்களும் தேவை.

“ஜன்மாந்தர க்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததே |
தத் சாந்தி: ஒளஷதை: தானை: ஜபஹோம ஸ§ரார்சனை: ||

அதாவது முற்பிறவியில் செய்த பாபம் நோய் வடிவில் துன்புறுத்துகிறது. இது மருந்து, தானம், ஜபம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது. பாரா ச்ருதி, ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களின் செய்முறைகளை ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், காத்யாயனர், விகனஸர் போன்ற பல மஹரிஷிகள் சூத்ரங்களாக அருளிச் செய்தனர். பின்னர் பல மஹான்கள் அவற்றை நடைமுறையில் தெளிவாகக் கையாளப் பல கல்ப ப்ரயோக க்ரந்தங்களையும் வ்யாக்யானங்களையும் தந்துள்ளனர். இந்நூல்களில் நித்ய, நைமித்திக கர்மாக்கள் தவிர, காம்ய, சாந்தி, பௌஷ்டிக, ப்ராயச்சித்த கர்மாக்களும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பாபங்களுக்குத் தக்கபடி மந்த்ரஜபம், க்ருச்ரம் (உபவாசம்) ஸ்நானம், தானம், ஹோமம், சாந்தி போன்றவை மஹார்ணவம் (கர்ம விபாகம்), சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் முதலிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. நோயாளி தக்க மருந்து அருந்தியும், உரிய சாந்திகள் செய்தும் குணமடைகிறான். மேலும் வலிமை பெற புஷ்டி தரும் டானிக் உள்ளது போல் பௌஷ்டிக கர்மாக்களும் உள்ளன. இந்த சாந்திகளால் நீண்ட ஆயுளும், உடல் நலமும், மனநிம்மதியும், அனைத்து வளங்களும் கிடைக்கும். இன்னல்கள் முற்றிலும் நீங்காவிடினும் பெரும்பாலும் குறையும். சாந்திகளால் மனச்சாந்தி கிட்டும்.

சாந்திகள் பலவிதம்:

அநேக சாந்திகள் ஜன்ம நக்ஷத்ரத்தையே பிரதானமாகக் கொண்டு செய்யப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு ஓர் ஆண்டு நிறையும் ஜன்ம மாஸ ஜன்ம நக்ஷத்திர நாளில் செய்யும் ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய சாந்தி அப்த பூர்த்தி. பின்னர் ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் தோறும் ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம் மூதாதையரின் வழக்கமாக இருந்து வந்தது. மாதந்தோறும் ஒவ்வொரு ஜன்ம நக்ஷத்ரம் அரிஷ்டகாலம் என்று கூறப்பட்டுள்ளதால், சில சுப காரியங்களை ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்யக்கூடாது என்று விலக்கப்பட்டிருக்கிறது. இது போல் ஜன்ம மாதமும் ஜன்ம வருஷமும் அரிஷ்ட காலம். பிரதி மாதம், பிரதி வருஷம் ஜன்ம வருஷம் ஜன்ம நக்ஷத்ரத்தில் நிவர்த்திக்காக சாந்தி செய்ய முடியாவிட்டாலும் கீழ்க்காணும் சில குறிப்பிட்ட சாந்திகளையாவது செய்து கொள்வது நல்லது.

சாந்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். 1.பீம சாந்தி= 55ஆவது வயது ஆரம்பம். 2.உக்ரரத சாந்தி= 60ஆவது வயது ஆரம்பம், 3.ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி= 61ஆவது வயது ஆரம்பம். 4.பீமரத சாந்தி= 70ஆவது வயது ஆரம்பம். 5.ரத சாந்தி= 72ஆவது வயது ஆரம்பம். 6.விஜய சாந்தி= 78ஆவது வயது ஆரம்பம். 7.சதாபிஷேகம்= 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில். 8.ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்)= பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால். 9.ம்ருத்யுஞ்ஜய சாந்தி= 85ஆவது முதல் 90க்குள். 10.பூர்ணாபிஷேகம்= 100ஆவது வயதில் சுபதினத்தில்.

இவற்றில் ஷஷ்டிதமாப்த பூர்த்தி வைபவம், சதாபிஷேகம் ஆகிய இரண்டையும் பலரும் கொண்டாடுகின்றனர். அனைத்து கர்மாக்களிலுமே, லௌகிகத்தைக் குறைத்து, வைதிகத்துக்கு முக்கியத்துவமளித்து உரிய தக்ஷிணை, ஸம்பாவனை தானங்கள் கொடுக்க வேண்டும். வைதிக கர்மாக்களை ச்ரத்தையுடன் முறையாகச் செய்து நம் தலைமுறையினர்க்கு வழி காட்ட வேண்டும்.

ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி:

அறுபது வயதில் என்ன விசேஷம்? ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.

“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”

என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.

இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.

ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.

ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).

முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.

60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.

ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||

இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.

எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:

சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.

சாஸ்த்ரக் கணக்கு:

விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.

“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”

ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.

“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||

மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).

விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.

துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.

(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)

சதாபிஷேகச் சிறப்பு:

த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ

வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||

நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.

தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.

வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்

மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.

பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.

இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.

சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:

1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.

கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:

81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.

சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||

ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||

சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||

நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்

இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

Tuesday, May 3, 2011

First Day Morning Rudhraekadasany homam Second Day Morning Shashtiapthapurthy homam


Expences In The Temple

Sl NoDETAILSAMOUNT (Rs:)
1.Temple Fees for Two Days (1500 + 1500)3,000
2.
First Day Morning Rudhraekadasany homam
Second Day Morning Shashtiapthapurthy homam
a. There are nine types of homas
  1. Ganapathy homam
  2. Navagraha homam
  3. Mrithyujanjaya homam
  4. Ayul homam
  5. Thanvadhiri homam
  6. Mahavishnu homam
  7. Mahalakshmi homam
  8. Sudharshana homam
b. Kaja pooja and Cow Pooja.
c. Panchamoorthy archnas are to perform.
d. The above homams performed by 11no's Vaidheekas
22,000
Total25,000

Bring the following from yours

  1. Manglayam, Thambathigal muhoortha Dhoti (9*5) and Sari (9 kajam).
  2. Another one Dhoti (9*5) and one Sari (9 kajam) for Dhanam.
  3. Muhoortha maalai, Matru maalai, Udhiry pushpam 2 Kgs.
  4. Chocolate, Sweet and Fruits (Apple, Orange, Banana etc.,).
  5. Coconuts smeared with turmeric - 7.
  6. Photos and Video available here.

pooja details


ONE KALA POOJA

Sl NoDETAILSAMOUNT (Rs:)
1.Temple Fees1,500
2.
a. 16 Kalasa pooja, One lala pooja including the following homas, (ie) Ganapathi Homam, Navagraha Homam, Mahavishnu Homam, Sudharsana Homam, Mahalaxmi Homam, Durga Homam, Anjaneyar Homam, Sasta Homam, Saraswathi Homam, Sashti Devatha Homam, Nakshatra Homam, Saptha Siranjeevi and Saptha rishi Homam.
b. Kaja pooja and Cow Pooja.
c. Panchamoorthy archnas are to perform.
7,000
Total8,500

TWO KALA POOJA

Sl NoDETAILSAMOUNT (Rs:)
1.Temple Fees1,500
2.
a. 16 Kalasa pooja, One lala pooja including the following homas, (ie) Ganapathi Homam, Navagraha Homam, Mahavishnu Homam, Sudharsana Homam, Mahalaxmi Homam, Durga Homam, Anjaneyar Homam, Sasta Homam, Saraswathi Homam, Sashti Devatha Homam, Nakshatra Homam, Saptha Siranjeevi and Saptha rishi Homam.
b. Kaja pooja and Cow Pooja.
c. Panchamoorthy archnas are to perform.
8,500
Total10,000

Bring the following items from yours

  1. Mangalyam,Thambathigal muhoortha dhoti and sari
  2. Dhoti, Sari 1,for dhanam.
  3. Muhoortha malai, matru malai,udhiry pushpam 2 kgs
  4. Chocklet, sweet, and fruits (apple, orange, banana, etc)
  5. Coconuts smeared with turmeric -7
  6. Photos and video available here.